10-ம் வகுப்பு தேர்வில் 84.41 சதவீதம் பேர் தேர்ச்சி

10-ம் வகுப்பு தேர்வில் 84.41 சதவீதம் பேர் தேர்ச்சி

Update: 2023-05-19 18:45 GMT

நாகை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு ேதர்வில் 84.41 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 7.24 சதவீதம் குறைவாகும்.

84.41 சதவீதம் பேர் தேர்ச்சி

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 10-ம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை நாகை மாவட்டத்தை சேர்ந்த 4,145 மாணவர்களும், 4,023 மாணவிகளும் என மொத்தம் 8,168 பேர் எழுதினர். இதில் 3,316 மாணவர்களும், 3,579 மாணவிகளும் என 6,895 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட, மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 84.41 ஆகும். இது கடந்த ஆண்டை விட 7.24 சதவீதம் குறைவு ஆகும். கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் 91.65 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் தங்களது செல்போன் மூலம் ஆன்லைனில் மதிப்பெண்களை தெரிந்து கொண்டனர்.

11 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

நாகை மாவட்டத்தில் செம்போடை அரசு மேல்நிலைப்பள்ளி, சிறுதலைக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி, கோவில்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி, கோவில்பத்து அரசு உயர்நிலைப்பள்ளி, ஆயக்காரன்புலம்- 3 அரசு உயர்நிலைப்பள்ளி, மருதூர் வடக்கு அரசு உயர்நிலைப்பள்ளி, நாலுவேதபதி அரசு உயர்நிலைப்பள்ளி, கருப்பம்புலம் பி.வி. தேவர் அரசு உயர் நிலைப்பள்ளி, கலசம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி, பன்னாள் அரசு உயர்நிலைப்பள்ளி, ராஜன்கட்டளை அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய 11 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அதேபோல் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியும், 9 மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி லட்சுதா 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண்களும், தமிழ், ஆங்கிலம் பாடங்களில் 98 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்