தஞ்சை மாவட்டத்தில் 84 பேர் கைது
தஞ்சை மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 84 பேரை கைது செய்தனர்.
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 84 பேரை கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள்
தஞ்சை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்டார்.இதன் பேரில் போலீசார் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தஞ்சை மாநகர பகுதிகளில் நடத்திய சோதனைகளில் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் ஒருவரையும், கிழக்கு போலீசார் 2 பேரையும், மேற்கு போலீசார் 4 பேரையும், தெற்கு போலீசார் 2 பேரையும், தாலுகா போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.
போலீசார் எச்சரிக்கை
மேலும் வல்லம் போலீசார் 5 பேரையும், தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் ஒருவரையும், கள்ளப்பெரம்பூர் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் போலீசார் மேற்கொண்ட சோதனையில் ஒரத்தநாடு சரக பகுதிகளில் 7 பேரையும், பட்டுக்கோட்டை சரக பகுதிகளில் 19 பேரையும், திருவையாறு சரக பகுதிகளில் 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.தஞ்சை புறநகர் பகுதிகளில் 14 பேரையும், கும்பகோணத்தில் 6 பேரையும், திருவிடைமருதூர் சரக பகுதியில் 7 பேரையும் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் மொத்தம் 84 பேர் கைது செய்யப்பட்டனர். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், இதேபோல் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.