மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனத்தில் ரூ.84 லட்சம் மோசடி

சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனத்தில் ரூ.84 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-12-24 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில்- ராஜபாளையம் சாலையில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனத்தில் அதன் நிர்வாக இயக்குனர் வளன் அரசு (வயது 51) என்பவர் கணக்குகளை ஆய்வு செய்தார். அப்போது, பணம் மோசடி நடந்துள்ளதை கண்டுபிடித்தார்.

இதுகுறித்து அவர் நடத்திய விசாரணையில் அங்கு கடந்த 10 ஆண்டுகாக பணியாற்றி கடந்த அக்டோபர் மாதம் வேலையை விட்டுச் சென்ற ராஜபாளையத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் மற்றும் அங்கு வேலை பார்த்த ராஜபாளையத்தை சேர்ந்த முனிராஜ், தென்காசி மாவட்டம் சோலைச்சேரியை சேர்ந்த இனியவன், தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சேர்ந்த சண்முகவேல் ஆகியோர் கூட்டாக இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மொத்தம் ரூ.84 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வளன் அரசு, விக்னேஷ்வரனிடம் போனில் கேட்ட போது அவர் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுதொடர்பாக வளன் அரசு சங்கரன்கோவில் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கொலை மிரட்டல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்