பிளஸ்-1 தேர்வில் 83.7 சதவீதம் பேர் தேர்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 83.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Update: 2023-05-19 18:45 GMT


மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 83.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ்-1 தேர்வு

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 5-ந் தேதி வரை பிளஸ்-1 தேர்வு நடந்தது. அதையடுத்த நடந்து முடிந்த பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 450 மாணவர்களும், 5 ஆயிரத்து 493 மாணவிகளும் என மொத்தம் 9 ஆயிரத்து 943 பேர் தேர்வு எழுதினர். அதில் 3 ஆயிரத்து 474 மாணவர்களும், 4 ஆயிரத்து 848 மாணவிகளும் என 8 ஆயிரத்து 322 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

83.7 சதவீதம் பேர் தேர்ச்சி

அதில் மாணவர்கள் 78.07 சதவீதமும், மாணவிகள் 88.26 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 83.7 சதவீதம் ஆகும். மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 அரசு உதவி பெறும் பள்ளியும், 20 மெட்ரிக் பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்