244 பேருக்கு ரூ.83¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

முத்துப்பேட்டையில் 2 நாட்கள் நடந்த ஜமாபந்தியில் 244 பேருக்கு ரூ.83¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

Update: 2023-05-26 18:45 GMT

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டையில் 2 நாட்கள் நடந்த ஜமாபந்தியில் 244 பேருக்கு ரூ.83¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

ஜமாபந்தி

முத்துப்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 2 நாட்கள் ஜமாபந்தி கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. நேற்று முன்தினம் முத்துப்பேட்டை வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட தோலி, வடசங்கேந்தி, சங்கேந்தி, பின்னத்தூர், மேலநம்மகுறிச்சி, முத்துப்பேட்டை, கீழநம்மகுறிச்சி, தெற்குகாடு, வடகாடு, ஆலங்காடு, உப்பூர், உதயமார்தாண்டபுரம், மங்கல், துறைக்காடு, ஜாம்புவானோடை வீரன்வயல், தில்லைவிளாகம், கழுவங்காடு, இடும்பாவனம், தொண்டியக்காடு, கற்பகநாதர்குளம் ஆகிய 21 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, பட்டாமாறுதல், பட்டா உட்பரிவு மாற்றம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கை மனுங்களை வழங்கினர். 2 நாட்கள் நடந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து 418 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

நலத்திட்ட உதவிகள்

அதனைத்தொடர்ந்து, வருவாய்துறையின் சார்பில் 244 பேருக்கு வீட்டுமனை பட்டாவுக்கான ஆணையும், 32 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையும், 10 பேருக்கு வேளாண் இடுபொருட்களும், 4 பேருக்கு மரகன்றுகளும் என உள்பட 291 பேருக்கு ரூ.83 லட்சத்து 29 ஆயிரத்து 357 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சித்தலைவர் பாலசுப்ரமணியன், முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கலைவாணி மோகன், வட்டாட்சியர் மகேஷ் குமார், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் சந்தான கோபால கிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஏழுமலை, துணை தாசில்தார்கள் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்