800 லிட்டர் மானிய மண்எண்ணெய் ஆட்டோவுடன் பறிமுதல்
800 லிட்டர் மானிய மண்எண்ணெய் ஆட்டோவுடன் பறிமுதல்
கொல்லங்கோடு:
கொல்லங்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமா தலைமையிலான போலீசார் நேற்றுமுன்தினம் இரவு திருமன்னம் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக கேரள பதிவெண் கொண்ட பயணிகள் ஆட்டோ வந்தது. இதனை கண்ட போலீசார் ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது டிரைவர் தப்பி ஓடி விட்டார். பின்னர் போலீசார் ஆட்டோவை சோதனை செய்த போது அதில் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கக்கூடிய மண்எண்ணெய் 25 கேன்களில் 800 லிட்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கேரளாவுக்கு கடத்தி சென்று இந்த மண்எண்ணெயை கூடுதல் விலைக்கு விற்க திட்டமிட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து ஆட்டோவுடன் மண்எண்ணெய் கேன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய ஆட்டோ டிரைவரை தேடிவருகின்றனர்.