காரில் கடத்திய 800கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

கோவில்பட்டி அருகே காரில் கடத்திய 800கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்ய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தநர்.

Update: 2023-04-04 18:45 GMT

கோவில்பட்டி அருகே காரில் கடத்தப்பட்ட 800 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.

போலீசார் சோதனை

தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் தலைமையில், ஏட்டுகள் பூலையா நாகராஜன், கந்தசுப்பிரமணியன் ஆகியோர் நேற்று கோவில்பட்டி- இளையரசனேந்தல் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை நடத்தினர். அந்த காரில் தலா 40 கிலோ எடை கொண்ட 20 சாக்கு மூட்டைகளில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் ரேஷன் அரிசி மூட்டகளை பறிமுதல் செய்தனர்.

வாலிபர் கைது

இந்த ரேஷன் அரிசியை கடத்தி வந்தாக கோவில்பட்டி காந்திநகர் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த அலங்கார முத்துபாண்டியன் மகன் சுந்தர் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ரேஷன் அரிசியை சேகரித்து கோழி, பன்றி தீவனத்துக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இது தொடர்பாக தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்