800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தூத்துக்குடி அருகே 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;
தூத்துக்குடி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தலைமையிலான போலீசார் எப்போதும்வென்றான் பகுதியில் தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு மினிவேனை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் 20 மூட்டைகளில் தலா 40 கிலோ வீதம் 800 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. உடனடியாக போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மினிவேன் டிரைவர் புதுமைசவரிமுத்து என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.