சரக்கு வாகனத்தில் கடத்திய 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

விழுப்புரம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-01-06 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே சிறுவந்தாடு சோதனைச்சாவடி அருகில் நேற்று விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த வாகனத்தில் 40 கிலோ எடை கொண்ட 20 மூட்டைகளில் 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அந்த சரக்கு வாகன டிரைவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் பெரம்பலூர் மாவட்டம் எலம்பாலூரை சேர்ந்த செல்வம் மகன் சீனிவாசன் (வயது 25) என்பதும், இவரும் திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த அப்துல்சமத் என்பவரும் சேர்ந்து சிறுவந்தாடு மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை திருச்சிக்கு கடத்த இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சீனிவாசனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கடத்தலில் தொடர்புடைய அப்துல்சமத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்