சிறை காவலர்கள் 80 பேர் குஜராத் பயணம்
விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க சிறை காவலர்கள் 80 பேர் குஜராத் சென்றனர்.
சிறைகாவலர்களுக்கு இடையே தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி, வருகிற 6-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதையொட்டி தமிழகத்தில் வேலூர், சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய சரகங்களுக்கு இடையே விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு மாநில அளவிலான அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி தமிழக சிறையில் 80 காவலர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இந்த நிலையில் வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. செந்தாமரைகண்ணன் தலைமையில் தமிழக சிறை காவலர்கள் 80 பேர் குஜராத்துக்கு சென்றுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.