நவம்பர் மாதத்தில் மெட்ரோ ரெயிலில் 80 லட்சம் பேர் பயணம்..!

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பெரும்பாலான மக்களின் தேர்வாக இருப்பது மெட்ரோ ரெயில் சேவை.

Update: 2023-12-01 10:21 GMT

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணிகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பெரும்பாலான மக்களின் தேர்வாக இருப்பது மெட்ரோ ரெயில் சேவை.

இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரெயில்களில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 80 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.அதிகபட்சமாக நவம்பர் 10 ஆம் தேதி 3.35 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர்.

மேலும் வாட்ஸ் - அப் மற்றும் இணைய பணப்பரிமாற்று செயலிகள் மூலம் பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யலாம் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்