வேனில் கடத்த முயன்ற 80 மூட்டை குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து சிவகங்கைக்கு வேனில் கடத்த முயன்ற 80 மூட்டை குட்கா பறிமுதல்; டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
ஓசூர்:
ஓசூர் அருகே பாகலூர் பக்கமுள்ள கக்கனூர் சோதனைச்சாவடியில், பாகலூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்குவேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், பெங்களூருவில் இருந்து சிவகங்கைக்கு 80 மூட்டைகளில் குட்கா கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குட்காவை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியை சேர்ந்த டிரைவர் மூர்த்தி (வயது6) மற்றும் வேன் உரிமையாளர் புன்னாராம் (24) ஆகிய 2 பேரையும் கைது போலீசார் கைது செய்தனர்.