கனிம வளங்களை கூடுதலாக ஏற்றி வந்த 8 லாரிகள் பறிமுதல்

கனிம வளங்களை கூடுதலாக ஏற்றி வந்த 8 லாரிகள் பறிமுதல்

Update: 2022-11-11 18:45 GMT

தக்கலை:

தக்கலை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வருவாய்த்துறை, வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இணைந்து வாகன சோதனை நடத்தினர். அப்போது கனிம வளங்களை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றி சென்ற 8 லாரிகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் கோழிப்போர்விளையில் உள்ள மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மொத்தம் 8 லாரிகளுக்கு ரூ.4 லட்சத்து 74 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கான அபராத தொகையை கட்டிய வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்