கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதுவை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆலகுராம் தலைமையிலான போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், குளித்தலையை சேர்ந்த குழந்தைவேல் (வயது 61), ஜாய்சன் (35), சுப்பிரமணி (45), இனுங்கூர் பகுதியை சேர்ந்தரங்கராஜ் (64), பொய்யாமணி நங்கம் வாய்க்கால் படித்துறை பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (42), பாலவிடுதியை சேர்ந்த முத்துச்சாமி (49), வெள்ளியணையை சேர்ந்த சதீஷ்குமார் (43), அய்யம்பாளையத்தை சேர்ந்த பெரியசாமி (61) ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 57 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.