பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-24 18:41 GMT

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள வெள்ளியம்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், சின்னதாராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு தென்னிலை அருகே உள்ள கூனம்பட்டியை சேர்ந்த தங்கையா (வயது 52), பால்வார்பட்டியை சேர்ந்த முருகேஷ் (48), கருநல்லிவலசை சேர்ந்த ரவிச்சந்திரன் (49), நாகம்பள்ளி முத்துக்கோனம் பாளையத்தை சேர்ந்த முனியப்பன் (38), திருப்பூர் மாவட்டம், பல்லடம் கே.அய்யம்பாளையத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (42), தாராபுரம் அருகே உள்ள வெள்ளவாவிப்புதுரை சேர்ந்த பழனிச்சாமி (43), வெள்ளக்கோவிலை சேர்ந்த ருத்ரமூர்த்தி (48), திண்டுக்கல் மாவட்டம், கீரனூரை சேர்ந்த வேலுச்சாமி (59) ஆகிய 8 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

இதையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.42 ஆயிரத்து 540 ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்