8 மாத பெண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

கடலூா் அருகே 8 மாத பெண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-20 13:57 GMT

நெல்லிக்குப்பம், 

கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கத்தை சேர்ந்தவர் விஜய்(வயது 26). இவருக்கும், சுபஸ்ரீ என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 8 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த சில நாட்களாக பெண் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தது. இதற்காக பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் உடல்நலம் சரியாகவில்லை. இதனால் விஜய் மனமுடைந்து காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் விஜய் தனது வீட்டில் உள்ள அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்