ரூ.8 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்

ரூ.8 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-08-13 19:56 GMT

பயணிகளிடம் சோதனை

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் சில பயணிகள் மூலம் தங்கம் கடத்தப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ேமலும் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் சில பயணிகள் வெளிநாட்டு கரன்சிகளை கடத்திச் செல்வதும் தொடர்ந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஸ்கூட் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அமெரிக்க டாலர்கள்

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த பயணி ஒருவரின் கைப்பையை, அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் ரூ.8 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் இருந்ததும், அவற்றை திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து மதுரையை சேர்ந்த கண்ணன் (வயது 45) என்ற பயணியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்