ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 8 மீனவர்கள் தாயகம் திரும்பினர்

ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 8 மீனவர்கள் தாயகம் திரும்பினர்.

Update: 2022-10-18 18:26 GMT

கோட்டைப்பட்டினம்:

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் 20-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். பின்னர் அவர்களை இலங்கையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 3-ந்தேதி இந்த வழக்கு இலங்கையில் உள்ள ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி 8 மீனவர்களையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து 8 மீனவர்களும் இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் 8 மீனவர்களும் அங்கு 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், நேற்று கொழும்புவில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். சென்னை வந்த 8 மீனவர்களையும், மீன்வளத்துறை சார்பாக உதவி ஆய்வாளர் கனகராஜ் வரவேற்று அங்கிருந்து வாகனம் மூலம் அழைத்து வந்து புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். முன்னதாக வீடு திரும்பிய மீனவர்களுக்கு மீனவ சங்கம் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்