8 அடி நீள மலைப்பாம்பு

சாலையில் ஊர்ந்து சென்ற 8 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.

Update: 2022-12-15 17:39 GMT

நத்தத்தை அடுத்த சிறுகுடி ஊராட்சி ஒடுகம்பட்டி அருகே சாலையில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. ஒரு கட்டத்தில் அந்த பாம்பு எங்கும் நகராமல் சாலையிலேயே படுத்து கொண்டது. இதுகுறித்து நத்தம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் திருக்கோல்நாதர் தலைமையிலான தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர்.

பின்னர் பொதுமக்கள் உதவியுடன் அந்த பாம்பை உயிருடன் பிடித்தனர். அது, 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஆகும். அந்த பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்