ஆமணக்கு விதைகளை தின்ற சிறுவர்-சிறுமியர் 8 பேருக்கு வாந்தி, மயக்கம் - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பாகலூர் அருகே ஆமணக்கு விதைகளை தின்ற சிறுவர்-சிறுமியர் 8 பேர் மருத்துவமனையதில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2022-07-03 13:51 GMT

ஓசூர்,

ஓசூர் அருகே ஜீமங்கலம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வட மாநிலத்தை சேர்ந்த 3 குடும்பங்கள் வந்து தங்கி. பாகலூர் பகுதியில் கூலித்தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த குடும்பங்களை சேர்ந்த சிறுவர்கள் பிகி குமார் (10), விஷால் குமார் (5), விஷால் (3) மற்றும் சிறுமிகள் பவிதா குமார் (8), சிபர்னி (5), பார்வதி (4), சோனாகுமாரி(3) ராதிகா (5) ஆகிய 8 பேரும் இன்று விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு கிடந்த ஆமணக்கு விதைகளை, விஷ விதை என்று தெரியாமல் எடுத்து சாப்பிட்டனர்.

சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் வாந்தி எடுத்து, வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி விழுந்தனர். இதனால் பதறிப்போன குடும்பத்தினர் உடனடியாக சிறுவர், சிறுமியரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பாகலூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்