8 பேர் மீது வழக்கு

Update: 2023-10-15 16:03 GMT


குன்னத்தூர் அருகிலுள்ள வளையபாளையத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 70). இவரது வீட்டுக்கு அருகாமையில் வசித்து வருவர் கிட்டுச்சாமி. இவர்கள் இருவருக்கும் இடையே காம்பவுண்டு சுவர் தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வடிவேலு இல்லத்தின் காம்பவுண்டு சுவற்றை கிட்டுச்சாமி மற்றும் அவரது உறவினர்கள் 8 பேர் சேர்ந்து சேதப்படுத்திவிட்டு வீட்டுக்குள் புகுந்து ரூ.50 ஆயிரம் மற்றும் ஒரு பவுன் எடையுள்ள இரண்டு மோதிரங்களை திருடி சென்று விட்டதாக சென்று விட்டதாக குன்னத்தூர் போலீசில் வடிவேல் புகார் தெரிவித்தார். இதன் அடிப்படையில் குன்னத்தூர் போலீசார் கிட்டுச்சாமி உள்பட அவரது உறவினர்கள் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்