ஜவளகிரி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது 10 வாகனங்கள், ரூ.1½ லட்சம் பறிமுதல்
ஜவளகிரி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 10 வாகனங்கள், ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன.
தேன்கனிக்கோட்டை:
ஜவளகிரி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 10 வாகனங்கள், ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன.
ரகசிய தகவல்
தேன்கனிக்கோட்டை தாலுகா ஜவளகிரி பகுதியில் உள்ள அரசு நிலத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக தளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தளி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் ஜவளகிரி பகுதிக்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 8 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பறிமுதல்
அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜவளகிரியை சேர்ந்த சீனிவாஸ் (வயது 38), மற்றொரு சீனிவாஸ் (42), ராஜேஷ் (28), சீனிவாசன் (56), நாராயணப்பா (54), கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் கனகபுரா அருகே உள்ள கொலகொண்டஅள்ளி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (33), எச்.டி.பி.எல்.அள்ளி பகுதியை சேர்ந்த மாரப்பா (42), கொடிஅள்ளி பகுதியை சேர்ந்த மாரியப்பா (65) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 8 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 கார், 8 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.