காலை 8 மணி முதல் 12 மணி நேர சேவை தொடக்கம்
திருப்பத்தூர் தலைமை தபால் நிலையத்தில் காலை 8 மணி முதல் 12 மணி நேர சேவை தொடங்கப்பட்டது.
திருப்பத்தூர் தலைமை தபால்நிலையத்தில் சேமிப்பு பண பரிவர்த்தனைகள் அனைத்தும் மாலை 3 மணி வரையும், மின் கட்டணம் செலுத்துதல், தொலைபேசி கட்டணம் செலுத்துதல், பதிவு தபால், துரித அஞ்சல் சேவை பதிவு, பண பரிவர்த்தனைகள் ஆகியவை இதுவரை மாலை 4 மணி வரை நடைபெற்று வந்தது.
தற்போது நேற்று முதல் சேமிப்பு பண பரிவர்த்தனைகள், புதிய சேமிப்பு கணக்கு தொடக்கம், ஆயுள் காப்பீட்டு பிரிமியம், மின் கட்டணம், தொலைபேசி கட்டணம் செலுத்துதல், பதிவு தபால், துரித அஞ்சல் சேவை பதிவு. மணியாடர் உள்ளிட்ட பண பரிவர்த்தனைகள் அனைத்தும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. இந்த சேவையை திருப்பத்தூர் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் மாதஸ்வரன் தொடங்கி வைத்தார். இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அஞ்சல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.