795 மதுபாட்டில்கள் பறிமுதல்
பேரையூர் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 795 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பேரையூர்,
பேரையூர் போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக எஸ்.கீழப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை பின்புறம் உள்ள ஒரு தோட்டத்தில் விற்பனை செய்வதற்காக 795 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை ரோந்து சென்ற போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து பேரையூர் போலீசார் சின்னமூர்த்தி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.