வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.79¼ லட்சம் முறைகேடு

திருப்பூர் சின்னகுமாரபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.79¼ லட்சம் முறைகேடு செய்த முன்னாள் செயலாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-26 18:45 GMT


திருப்பூர் சின்னகுமாரபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.79¼ லட்சம் முறைகேடு செய்த முன்னாள் செயலாளரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ரூ.79¼ லட்சம் முறைகேடு

திருப்பூர் மாவட்டம் உடுமலை இந்திரா நகரை சேர்ந்தவர் ஜெக நாதன் (வயது 52). இவர் கடந்த 2012-2017 காலகட்டத்தில் உடுமலை சின்னகுமாரபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளராக இருந்தார்.

அந்த காலக்கட்டத்தில் நடந்த வரவு செலவு குறித்து கூட்டுறவுத் துறை தணிக்கை செய்தது. இதில், முன்னாள் செயலாளர் ஜெகநாதன், தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவை சேர்ந்த 14 பேர் ரூ.79 லட்சத்து 22 ஆயிரத்து 200 முறைகேடு செய்தது தெரியவந்தது.

இது குறித்து கூட்டுறவுத் துறை துணை பதிவாளர் மணி, கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராணி யிடம் சில மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தார். அது தொடர்பாக விசாரணை நடைபெற்றது.

முன்னாள் செயலாளர் கைது

இதில், கடன் சங்க உறுப்பினர்கள் சிலர் தங்களுடைய தங்க நகைக ளை கடன் சங்கத்தின் பாதுகாப்பு பெட்டகங்களில் வைத்திருந்தனர். அந்த தங்க நகைகளை உரிமையாளர்களுக்கு தெரியாமல் வைத்து கடன் பெற்றதும், நகைகளை வைத்து கடன் பெற்ற சிலர் வாங்கிய கடனை திரும்ப செலுத்திய தொகையை சங்க கணக்கில் டெபாசிட் செய்யாமல் முறைகேடு செய்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக 14 பேர் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீ சார் மோசடி உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் கூட்டுறவு கடன் சங்க முன்னாள் செயலாளர் ஜெகநாதனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்