உடல் தகுதி தேர்வில் 782 பேர் தேர்வு

2-ம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வில் 782 பேர் தேர்வு பெற்றனர்.

Update: 2023-02-10 16:32 GMT

2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்ற வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 1,059 பேருக்கு வேலூர் நேதாஜி மைதானத்தில் கடந்த 6-ந் தேதி முதல் உடல்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக நடைபெற்ற சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உயரம், மார்பு அளவீடு, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்டவற்றில் 794 பேர் தேர்வாகினர். அவர்களுக்கு 2-ம் கட்டமாக நேற்று முன்தினம் உடல்தகுதி தேர்வு நடந்தது. இதில் பங்கேற்ற 346 பேரில் 338 பேர் தேர்வாகினர். மீதமுள்ள 448 பேருக்கு நேற்று உடல்தகுதி தேர்வு நடைபெற்றது. கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்டம் நடைபெற்றது. இதில் 444 பேர் தேர்வாகினர். உடல்தகுதி தேர்வு முடிவில் 782 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதனை வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையிட்டனர். இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்