காணாமல் போன 75 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
தென்காசி மாவட்டத்தில் காணாமல் போன 75 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.;
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக செல்போன்கள் காணாமல் போனதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, காணாமல் போன 75 செல்போன்களை கண்டுபிடித்து மீட்டனர். அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று தென்காசியில் நடைபெற்றது. இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் கலந்து கொண்டு உரியவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்.
அப்போது அவர் கூறும்போது, சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தனராஜ் கணேஷ், இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் செண்பகப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.