மக்கள் நீதிமன்றத்தில் 722 வழக்குகள் முடித்துவைப்பு

கோவில்பட்டியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 722 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டது.

Update: 2023-02-11 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் 1,578 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு, 722 வழக்குகள் ரூ.80 லட்சத்து 14 ஆயிரத்து 230-க்கு முடித்து வைக்கப்பட்டது.

இதற்கான உத்தரவுகளை சார்பு நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் வழங்கினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி முரளிதரன், குற்றவியல் நீதிபதிகள் கடற்கரை செல்வம், பீட்டர், விரைவு நீதிமன்ற நீதிபதி முகமது சாதிக் உசேன், வக்கீல்கள் பாப்பு ராஜ், நாகராஜன், மோகன்தாஸ், சிவகுமார், வட்ட சட்ட பணியாளர்கள் ஜோன்ஸ் இம்மானுவேல், மரிக்கொழுந்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்