வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தில் 717 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தில் 717 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

Update: 2022-07-01 19:24 GMT

புதிய வேளாண் காடு வளர்ப்புத் இத்திட்டத்தின் கீழ் 717 விவசாயிகளுக்கு 1 லட்சத்து 89 ஆயிரத்து 600 லட்சம் மரக்கன்றுகள் ரூ.13.27 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டு பயனடைந்துள்ளனர்.

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 35,481 தேசிய முதியோர் ஓய்வுதியமாக ரூ.37.25 கோடியும், 9,550 ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் ஓய்வுதியமாக ரூ.10.02 கோடியும், 2,722 ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வுதியமாக ரூ.2.87 கோடியும், 50 வயதைக் கடந்த 354 திருமணமாகாத ஏழை மகளிருக்கு ஓய்வுதியாமாக ரூ.0.37 கோடியும், 20,235 ஆதரவற்ற விதவை தாய்மார்களுக்கு ரூ.21.25 கோடியும், 342 முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்புத்திட்ட ஓய்வூதியமாக ரூ.0.36 கோடியும், 89 முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதியமாக ரூ.0.10 கோடியும் வழங்கப்பட்டு பயனடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்