விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசார் 71 பேர் இடமாற்றம்
விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசார் 71 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவில் பணியாற்றி வரும் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜாகிர்உசேன், புகழேந்தி, அருள், பன்னீர்செல்வம், கோவிந்தராஜ், சந்திரசேகரன், ஸ்ரீபால், வெங்கடேசன், பரசுராமன், தெய்வசிகாமணி, தனபால் மற்றும் போலீஸ் ஏட்டுகள், போலீசார் என 71 பேர் மாவட்டத்திற்குள் வெவ்வேறு இடங்களுக்கு நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவில் பணியாற்ற இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பிறப்பித்துள்ளார்.