தஞ்சை மாவட்டத்தில் 71 சதவீத வாக்குப்பதிவு

தஞ்சை மாவட்டத்தில் 71 சதவீத வாக்குப்பதிவு

Update: 2022-07-09 20:00 GMT

தஞ்சை மாவட்டத்தில் நேற்று நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் 71 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

உள்ளாட்சி இடைத்தேர்தல்

தஞ்சை மாவட்டத்தில் காலியாக இருந்த 30 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில் ஒரு நபர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதனால் 8 கிராம ஊராட்சி வார்டுகளுக்கும், ஒரு பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அதன்படி அய்யம்பேட்டை பேரூராட்சியில் உள்ள 9-வது வார்டு, கிராம ஊராட்சிகளான பூதலூரில் 6-வது வார்டு, தஞ்சை ஒன்றியத்தில் உள்ள தென்பெரம்பூரில் 2-வது வார்டு, திருவிடைமருதூர் ஒன்றியத்தில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் 3-வது வார்டு, கோவிந்தபுரத்தில் 8-வது வார்டு, அம்மாபேட்டை ஒன்றியத்தில்உள்ள வடபாதியில் 3-வது வார்டு, திருப்பனந்தாள் ஒன்றியத்தில் உள்ள திருலோகியில் 2-வது வார்டு, கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ள 9-வது வார்டு, பாபநாசம் ஒன்றியத்தில்உள்ள சக்கராபள்ளியில் 3-வது வார்டு ஆகிய 8 இடங்களில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

71 சதவீத வாக்குப்பதிவு

இதில், அய்யம்பேட்டை பேரூராட்சி 9-வது வார்டில் 74.79 சதவீத வாக்குகளும், கிராம ஊராட்சி வார்டுகளில் 69.13 சதவீத வாக்குகளும் பதிவாகின. மாவட்டத்தில் சராசரி வாக்கு பதிவு 71 சதவீதம் ஆகும்.

அய்யம்ேபட்ைட

அய்யம்பேட்டை பேரூராட்சி 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில் வாக்குப்பதிவிற்காக அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் இரண்டு வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் மூடி, முத்திரையிடப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டு, அறைக்கு வெளியே துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் ஏற்பாடுகளை பேரூராட்சி செயல் அதிகாரியும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜசேகர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவாஜி ஆகியோர் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்