காரில் கடத்தி வரப்பட்ட 707 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
காரில் கடத்தி வரப்பட்ட 707 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;
புகையிலை பொருட்கள் கடத்தல்
புதுக்கோட் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை பிரிவினர் கந்தர்வகோட்டை-கறம்பக்குடி நெடுஞ்சாலையில் கொல்லம்பட்டி கிராமத்தின் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கொல்லம் பட்டி செல்லையன் மகன் பாஸ்கர் (வயது 38), தஞ்சாவூர் தனுஷ்கோடி மகன் மதரை ராஜா (47), சேலம் செக்காராம் மகன் ஹரிஷ் (33), சேலம்ஜருப்பிராம் மகன் பெறாராம் (30) ஆகியோர் என்பதும், காரில் 707 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
4 பேர் கைது
இதையடுத்து போலீசார் 707 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்ததோடு, 4 பேரை கைது செய்து, கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.