மோட்டார் சைக்கிளில் கடத்திய 700 மதுபாட்டில்கள் பறிமுதல்

நாகூர் அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 700 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

Update: 2023-06-30 18:45 GMT

நாகூர்:

நாகூர் அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 700 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

மதுபாட்டில்கள் கடத்தல்

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி சாராய கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாகூர்-திட்டச்சேரி சாலையில் நாகூர் போலீ்சார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் 700 மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.

2 பேர் கைது

இதையடுத்து நடந்த விசாரணையில் அவர்கள் ஓரத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த வேலாயுதம் மகன் தாஸ்(வயது 19) மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வேட்டைக்கார தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சரவணன்(37) என்பதும், அவர்கள் கீழ வாஞ்சூர் பகுதியில் இருந்்து மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நாகூர் போலீசார், தாஸ் மற்றும் சரவணனை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 700 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்