மேல்மலையனூருக்கு 70 சிறப்பு பஸ்கள் இயக்கம்

அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூருக்கு 70 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.;

Update: 2023-07-17 17:21 GMT

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இதற்கு பல்வேறு மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் செல்வார்கள். அவர்கள் பெரும்பாலும் பஸ் போக்குவரத்தை பயன்படுத்துவார்கள். எனவே பொதுமக்களின் வசதிக்காக வேலூர் போக்குவரத்து கழகம் சார்பில் வேலூர், ஆற்காடு, திருப்பத்தூரில் இருந்து சுமார் 70 சிறப்பு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டது. வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 30 பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பஸ்களில் ஏராளமான பக்தர்கள் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்