குன்னூரில் 70 இடங்கள் பேரிடர் ஏற்படும் ஆபத்தான இடங்களாக அறிவிப்பு..!
தென்மேற்கு பருவ மழைகாலத்தில் குன்னூரில் 70 இடங்கள் பேரிடர் ஏற்படும் ஆபத்தான இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குன்னூர்,
தென்மேற்கு பருவ மழைகாலத்தில் குன்னூரில் 70 இடங்கள் பேரிடர் ஏற்படும் ஆபத்தான இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையின் போது, குன்னூரில் உள்ள நஞ்சப்பசத்திரம், மந்தாடா, சோல்ராக் எஸ்டேட், கல்குழி, அச்சணகல், பாரதி நகர், கிருஷ்ணாபுரம், எம்ஜிஆர் நகர் உள்பட 70 இடங்கள் மிகவும் ஆபத்தான பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் காலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் பொது மக்களை தங்க வைக்க 49 பள்ளிகள், 53 சமுதாய கூடங்கள் மற்றும் உள் விளையாட்டு அரங்கம் ஆகியவை தயார் நிலையில் இருப்பதாக வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.