70 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல்லில் 70 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2023-09-25 21:15 GMT

திண்டுக்கல் மாநகர்நல அலுவலர் (பொறுப்பு) செபாஸ்டின் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, தங்கவேல், செல்வராணி, பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் திண்டுக்கல் நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் நேற்று ஆய்வு நடத்தினர். அப்போது திண்டுக்கல் ஏ.எம்.சி.சாலை, பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள டீக்கடைகள், ஓட்டல்கள், மளிகை கடைகள் என மொத்தம் 12 கடைகளில் ஆய்வு நடந்தது. அதில் 8 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 70 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்