பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 7 ஆண்டு சிறை
பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.;
ராமநாதபுரம் அருகே உள்ள எம்.மோர்குளம் பகுதியை சேர்ந்தவர் இம்ரான் என்பவரின் மனைவி ஆயிசத்து இமான் (வயது 29). இவர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 18-ந் தேதி எம்.மோர் குளம் ஊருணியில் குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சின்ன ஏர்வாடி மேலவலசையை சேர்ந்த பஞ்சவர்ணம் (36), ஆயிசத்து இமான் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்து ஆயிசத்து இமான் அளித்த புகாரின் அடிப்படையில் கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பஞ்சவர்ணத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி கவிதா மேற்கண்ட பஞ்சவர்ணத்திற்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.