எல்லை பாதுகாப்பு படை வீரருக்கு 7 ஆண்டு சிறை

தளபதிசமுத்திரத்தில் வங்கியில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்பு படை வீரருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாங்குநேரி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது

Update: 2022-09-29 21:30 GMT

நாங்குநேரி:

தளபதிசமுத்திரத்தில் வங்கியில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்பு படை வீரருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாங்குநேரி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கொள்ளை முயற்சி

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளபதிசமுத்திரம் கீளூர் பெருமாள் கோவில் தெருவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இங்கு கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 2-ந்தேதி தளபதிசமுத்திரம் கீளூர், சிவன் கோவில் வடக்கு ெதருவை சேர்ந்த பன்னீர்செல்வம் என்ற பன்னீர் (வயது 41) என்பவர் வந்தார்.

எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வந்த அவர், படைப்பிரிவில் அனுமதி இல்லாமல் துப்பாக்கி மற்றும் தோட்டாவை திருடி கொண்டு வந்திருந்தார்.

பின்னர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு, நாங்குநேரி விநாயகர் சன்னதி தெருவை சேர்ந்த தாயப்பன் என்பவருடன் சேர்ந்து வங்கி அலுவலர்களிடம் பண பெட்டகம் இருக்கும் இடத்தை காட்டுமாறு கேட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் 2 வங்கி அலுவலர்களை துப்பாக்கியால் சுட்டு காயம் ஏற்படுத்தினார்.

இந்த கொள்ளை முயற்சி குறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

7 ஆண்டு சிறை

இந்த வழக்கு விசாரணை நாங்குநேரி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ராமதாஸ், பன்னீர்செல்வம் என்ற பன்னீருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய தாயப்பன் ஏற்கனவே இறந்துவிட்டார், என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்