சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட வாலிபருக்கு 7 ஆண்டு சிறை

சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.;

Update: 2023-04-17 16:19 GMT

சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சிறுமியிடம் பாலியல் தொந்தரவு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா வேப்பூர் செக்கடி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். அவரது மகன் வேலு (வயது 24). இவர், கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 19-ந் தேதி 3-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 8 வயதுடைய சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் செங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலுவை கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார்.

7 ஆண்டு சிறை

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட வேலுவிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.1 லட்சம் வழங்க பரிந்துரை செய்தார். அதன் பின்னர் வேலுவை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்