7 வயது பேத்திக்கு பாலியல் தொந்தரவு; போக்சோ சட்டத்தில் முதியவர் கைது
7 வயது பேத்திக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த ெதாழிலாளி ஒருவரின் 7 வயது மகள் 2-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த சிறுமி பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவரது தந்தை வீட்டில் இல்லை. 75 வயதான சிறுமியின் தாத்தா மட்டுமே வீட்டில் இருந்தார். வீட்டில் யாரும் இல்லாததை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அவரது தாத்தா, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரிய பாக்கியம் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுமியின் தாத்தாவை கைது செய்தனர்.