விதிகளை மீறி இயக்கப்பட்ட லாரிகள் உள்பட 7 வாகனங்கள் பறிமுதல்
திண்டுக்கல்லில் விதிகளை மீறி இயக்கப்பட்ட லாரிகள் உள்பட 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;
திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் திண்டுக்கல் பூ மார்க்கெட் அருகே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாலை விதிகளை மீறி இயக்கப்படுகிறதா? என்று வாகனங்களை சோதனை செய்தனர். அதில் சொந்த பயன்பாட்டுக்கு பதிவு செய்து வாடகைக்கு இயக்கப்பட்ட 3 கார்கள், பள்ளி மாணவ-மாணவிகளை அதிக அளவில் ஏற்றி வந்த 2 ஆட்டோக்கள் சிக்கின. இதையடுத்து 3 கார்கள் மற்றும் 2 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் திண்டுக்கல்-மதுரை சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி சென்ற 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 7 வாகனங்களுக்கும் மொத்தம் ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் அபராதம் விதித்தனர்.