7 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

7 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Update: 2023-01-05 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் உட்கோட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த மணிகண்டன் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்திற்கும், விக்கிரவாண்டி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் விழுப்புரம் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கும், திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வானூர் போலீஸ் நிலையத்திற்கும், செஞ்சி மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணியன் செஞ்சி போலீஸ் நிலையத்திற்கும், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தமயந்தி செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் ஆரோவில் போலீஸ் நிலையத்திற்கும், கிளியனூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி திண்டிவனம் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்