லாரி டிரைவர் வீட்டில் 7 பவுன் நகை திருட்டு

லாரி டிரைவர் வீட்டில் 7 பவுன் நகை திருடப்பட்டுள்ளது.

Update: 2023-06-21 17:55 GMT

சேத்துப்பட்டு

லாரி டிரைவர் வீட்டில் 7 பவுன் நகை திருடப்பட்டுள்ளது.

பெரணமல்லூரை அடுத்த வெளுமந்தாங்கள் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 37). டிரைவராக வேலை செய்கிறார். சம்பவத்தன்று காலையில் அவரது வீட்டில் உள்ள பீரோவில் 7 பவுன் நகை, ரூ. 80ஆயிரத்தை வைத்துள்ளார். பீரோ மீது சாவியை வழக்கம்போல் வைத்து விட்டு கண்ணமங்கலத்துக்கு சென்றுள்ளார்.

பின்னர் வீடு திரும்பியபோது பீரோ திறந்து துணிகள் சிதறி கிடந்தன. அதில் வைத்திருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.80 ஆயிரம் திருடு போயிருந்தது. இது குறித்து பெரணமல்லூர் போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் பெரணமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் திருட்டு நடந்த வீட்டை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி மர்மநபரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்