பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

மன்னார்குடி அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-10-26 18:45 GMT

மன்னார்குடி அருகே உள்ள விக்கிரபாண்டியம் ஆலந்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பரந்தாமன். விவசாயி. இவரது மனைவி கபிலா (வயது 28). இவர் தஞ்சை அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி (பி.எட்) படித்து வருகிறார். இதற்காக தஞ்சை மருங்குளம் அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர் பயிற்சிக்காக சென்று வருகிறார். இந்தநிலையில் அந்த பள்ளிக்கு செல்வதற்காக நேற்று மன்னார்குடி வழியாக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். ஒரத்தநாடு சாலையில் தெற்குநத்தம் என்ற பகுதியில் சென்றபோது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கபிலா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு வேகமாக சென்று விட்டனர்.

2 வாலிபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து மன்னார்குடி போலீசில் கபிலா புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்