வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் 1-ம் சேத்தி வடக்கு குத்தகையை சேர்ந்தவர் சக்திவேலன். இவரது மனைவி இளவரசி (வயது38). இவர் ஆயக்காரன்புலம் கடை தெருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தினமும் வீட்டில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று வருகிறார். நேற்று காலை மழை பெய்ததால் பஸ்சில் செல்வதற்காக பஸ்நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் இளவரசியிடம் டீக்கடை எங்கு உள்ளது என கேட்டுள்ளனர். அப்போது இளவரசி கழுத்தில் கிடந்த 7 பவுன்சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வாய்மேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் இரண்டு இளைஞர்கள் மோட்டார்சைக்கிளில் செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.
இதுகுறித்து வாய்மேடு போலீசார் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.