பணித்தள பொறுப்பாளரை தாக்கி 7½ பவுன் சங்கிலி பறிப்பு

பள்ளிகொண்டா அருேக ஸ்கூட்டரில் தோழியுடன் சென்ற பணித்தள பொறுப்பாளரை தாக்கி 7½ பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-06-29 15:18 GMT

பள்ளிகொண்டா அருேக ஸ்கூட்டரில் தோழியுடன் சென்ற பணித்தள பொறுப்பாளரை தாக்கி 7½ பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பணித்தள பொறுப்பாளர்

பள்ளிகொண்டாவை அடுத்த சின்னச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன், தனியார் பள்ளி பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுதா (வயது 38), தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று சுதா தனது ஸ்கூட்டரில் பள்ளிகொண்டா சென்றார். அங்கு வேலைகளை முடித்து விட்டு இரவு 8 மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த தனது தோழியுடன் ஸ்கூட்டரில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சின்னச்சேரி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

சங்கிலி பறிப்பு

அப்போது அந்த வழியாக எதிரே ஒரு மோட்டார்சைக்கிளில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் 2 பேர் ஹெல்மெட் அணிந்த படி வந்தனர். அவர்கள், சுதா ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது மோதுவதுபோல் வந்தனர். அதில் பயந்துபோன சுதா ஸ்கூட்டரை சாலை ஓரம் நிறுத்தினார்.

உடனே மர்ம நபர்கள் திடீெரன சுதாவின் கழுத்தில் இருந்த தாலி சரடு மற்றும் தங்கச் சங்கிலி என 7½ பவுன் நகையை பறித்தனர். மர்ம நபர்களுடன் சுதாவும், உடன் வந்த தோழியும் போராடினர். அதில் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் சுதாவை தாக்கி விட்டு நகைகளுடன் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து சுதா பள்ளிகொண்டா போலீசில் புகார் ெசய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து பார்த்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்