பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

விழுப்புரத்தில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

Update: 2023-02-12 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மூர்த்தி சப்-இன்ஸ்பெக்டர்கள் மருதப்பன் சத்யானந்தம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பூந்தோட்ட பாதை கந்தசாமி தெரு பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட விழுப்புரம் மாந்தோப்பு தெருவை சேர்ந்த முத்து(வயது 35), விழுப்புரம் மந்தக்கரையை சேர்ந்த வெங்கடேஷ்(51), வ.உ.சி. தெரு சதீஷ்குமார்(44), பூந்தோட்டம் பாதை ராஜேஷ்(32), வி.மருதூர் சேகர்(39), விழுப்புரம் மேல் அக்ரஹார தெரு ராமசாமி(82), கடலூர் கட்ட முத்துப்பாளையம் சுப்பிரமணியன்(69) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.9,330 மற்றும் 6 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்