பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

திருவெண்ணெய்நல்லூர் அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

Update: 2023-01-01 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே மணல்மேடு ஏரி பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை பிரிவு போலீசார், திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியதாக அரசூரை சேர்ந்த வீரன் (வயது 37), சித்தாத்தூர் கந்தன் (45), ஏமப்பூர் ராமச்சந்திரன் (43), ஒருகோடி கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் (50),நெற்குணம் சக்திவேல் (31), மணல்மேடு கோவிந்தன் (40), சித்தாத்தூர் திருக்கை அன்பு (34) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. மேலும் அவர்களிடமிருந்து 1 ஆட்டோ, 3 இருசக்கர வாகனம், ரூ. 19ஆயிரத்து 200-ஐ பறிமுதல் செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்