குளித்தலை பகுதியில் சேவல் சண்டையில் ஈடுபட்ட 7 பேர் கைது
குளித்தலை பகுதியில் சேவல் சண்டையில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேவல் சண்டை
கரூர் மாவட்டம், குளித்தலை போலீசார் குளித்தலை சுற்றுவட்டார பகுதியில் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளித்தலை ரெயில் நிலையம் அருகே சேவல் சண்டை நடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது.
போலீசார் அங்கு சென்ற போது சேவல் சண்டையில் ஈடுபட்ட நபர்கள் ஓடிவிட்டனர். இதன் பின்னர் போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
7 பேர் கைது
போலீசார் விசாரணையில் சேவல் சண்டையில் ஈடுபட்டது திருச்சி மாவட்டம் அல்லித்துறை பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 31), பாஸ்கரன் (30), ஈரோடு மாவட்டம் பச்சைமலை ரோடு பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (44), கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியைச் சேர்ந்த வீரமலை (37), விஜய் (25), மூர்த்தி (33), பொய்கை புத்தூர் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (33) என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.