சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

Update: 2023-06-24 19:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக நகர மேற்கு போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது சூதாட்டம் நடைபெறுவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் பொள்ளாச்சியை சேர்ந்த மணிகண்டன் (வயது 48), ஜெயகுமார் (47), தேவா (48), அன்சாரி (46), சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த காஜாமொய்தீன் (42), குணாசெல்வம் (42), வடுகபாளையத்தை சேர்ந்த பிரபாகரன் (48) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.16 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்